பழனியில் 3 நாட்களுக்கு தரிசன கட்டணம் ரத்து... தைப்பூசத்திற்காக குவிந்த பக்தர்கள் !
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று மாலை திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவிலும் “அரோகரா” கோஷத்துடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி நகரமே பக்தர்களால் நிரம்பி காணப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 2 லட்சம் பேர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். தற்போது தரிசனத்திற்கு 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கட்டண தரிசனமும், தங்க ரத புறப்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காத்திருக்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர், சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன. 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 22 சிறப்பு குற்றத் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 600 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இடும்பன்குளம், சண்முகநதி பகுதிகளில் தீயணைப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
