மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு… 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

 
meenakshi amman temple
 

 

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சுவாமி தரிசனத்திற்கு தலா ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பணியில் இருந்த இரண்டு ஊழியர்கள் மீது புகார்கள் எழுந்தன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது. சன்னதியில் டிக்கெட்டுகளை பரிசோதித்த சிவராஜ், டிக்கெட்டுகளை கிழிக்காமல் பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த டிக்கெட்டுகளை டிக்கெட் வழங்கும் ஊழியர் பேச்சிக்கு கொடுத்து, மீண்டும் பக்தர்களிடம் கட்டணம் வாங்கி வழங்கியுள்ளனர். இவ்வாறு பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகளை விற்றது தெரியவந்துள்ளது.

மீனாட்சி அம்மன்

இதையடுத்து கோயில் இணை ஆணையர் சுரேஷ், இரு ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க கோயில் முழுவதும் 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகம் மேலதிக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!