திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்... வாட்ஸ் அப் செயலி மூலம் தரிசன டிக்கெட்டுகள்!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

 திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவர்களின் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது.   இதனால், திருப்பதி கோயிலுக்குச் செல்வோர் டிக்கெட் முன்பதிவு செய்வது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது.  

திருப்பதி


அதன்படி, 9552300009 என்ற வாட்ஸ்அப்பில் எண்ணுக்கு hi என அனுப்பி தொடங்க வேண்டும்.  அதில் தரிசனம், நன்கொடைகள், பூஜை நேரம் போன்ற  தகவல்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம். இதேபோல் விஜயவாடாவில் உள்ள துர்காமல்லேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, சிம்ஹாசலம், அன்னவரம், துவாரகா திருமலை போன்ற இந்து அறநிலையத்துறை கோயில்களின் சேவைகளை வாட்ஸ்அப்பில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
 அத்துடன், விரும்பும் சேவையை தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தினால் வாட்ஸ் அப் எண்ணுக்கே டிக்கெட் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிமுறைகளை பின்பற்றி விருப்பங்களை தேர்ந்தெடுத்து விவரங்கள் வழங்கியவுடன் டிஜிட்டல் ரொக்கப்பணம் செலுத்தும் 'கேட்வே' உடனடியாக தோன்றும்.

சந்திரபாபு நாயுடு
இதில் ரொக்கப்பணம் செலுத்துதல் முடிந்தவுடன், டிக்கெட் செலுத்துபவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். இதன் மூலம் முன்பதிவு விவரங்களைப் பெறலாம். பக்தர்கள் இந்த டிக்கெட்டை 'டவுன்லோடு' செய்து, பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு அந்தந்த கோவில்களுக்கு செல்லலாம் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.  
அதேபோல் மத்திய அரசின் அனுமதியுடன், வாட்ஸ்அப்பின் நிர்வாக திட்டமான 'மன மித்ரா'வில் ரயில் டிக்கெட்டுகளை சேர்க்க அரசு முயற்சிக்கும் என ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web