ஐசிசி ஒருநாள் பட்டியலில் டேரில் மிட்செல் வரலாறு படைத்து முதலிடம்!
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் திடீர் முன்னேற்றத்துடன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் அவர் விளாசிய 119 ரன் சதம் தரவரிசையில் வெகுவாக உயர்த்தியது. ஆட்டநாயகன் விருதை பெற்ற அந்த அசத்தல் இன்னிங்க்ஸ், அவரை 746 புள்ளிகளில் இருந்து 782 புள்ளிகளுக்கு துள்ளச் செய்து உலகின் நம்பர்–1 பேட்ஸ்மனாக மாற்றியது.
1979இல் க்ளென் டர்னர் இதே சாதனையை படைத்ததிலிருந்து 46 ஆண்டுகள் கடந்த பிறகே நியூசிலாந்து வீரர் ஒருவர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்துக்குச் செல்வது என்பது வரலாற்றுச் சிறப்பாகும். மார்டின் க்ரோவ், வில்லியம்சன், ராஸ் டெய்லர் உள்ளிட்ட பல நியூசிலாந்து முன்னணி நட்சத்திரங்கள் முதல் 5 இடத்தில் இருந்தபோதிலும், முதலிடத்தை எவரும் பிடிக்கவில்லை. அந்த வெற்றிடத்தை மிட்செல் இந்த வார தரவரிசையில் நிரப்பியுள்ளார்.

முதலிடத்தில் இருந்த இந்தியாவின் ரோஹித் சர்மா 781 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு சரிந்திருக்கிறார். இப்ராஹிக் ஜத்ரன், ஷுப்மன் கில், விராட் கோலி, பாபர் அசாம் ஆகியோர் முதல் 10 இடங்களில் தொடர்ந்தும் நிலைத்திருக்கின்றனர். இன்று வெளியான பட்டியலில் டேரில் மிட்செலின் ஏற்றம், உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய பேச்சாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
