60 அடி கிணற்றில் தவறி விழுந்த மகள்... நொடியில் குதித்த தந்தை… நெகிழ்ச்சி வீடியோ!
தந்தையின் பாசம் எவ்வளவு வலிமையானது என்பதை நிரூபிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. எதிர்பாராத விதமாக ஒரு சிறுமி சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதைப் பார்த்த தந்தை ஒரு நொடி கூட தயங்கவில்லை. மகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அதே கிணற்றுக்குள் குதித்தார்.
बेटी बोरवेल में गिरी तो पिता ने भी लगा दी छलांग... यमराज से छीने अपनी लाडली के प्राण...#Gujarat #Borewell #BorewellHole #Chandlodiya #Chandlodia pic.twitter.com/kqFW4zMH3g
— Sambhava (@isambhava) December 17, 2025
60 அடி ஆழம் என்பது உயிருக்கே ஆபத்தானது. ஆனாலும் தந்தையின் துணிச்சலுக்கு அங்கு நிற்பவர்களே அதிர்ந்தனர். தந்தை மற்றும் மகள் இருவரும் கிணற்றுக்குள் சிக்கியதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனே ஓடிவந்தனர். தகவல் பரவி கிராமமே பரபரப்பானது.
கயிறுகளை பயன்படுத்தி பொதுமக்கள் போராடி இருவரையும் மேலே மீட்டனர். அதிர்ஷ்டவசமாக தந்தையும் மகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தையின் தியாகத்தையும் துணிச்சலையும் பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
