மாமனார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த மருமகள்!
திருத்தணி அருகே நெமிலி கிராமத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. குடும்பத் தகராறில் மாமனார் சபாபதி (65) மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றதாக மருமகள் காயத்ரி (42) மற்றும் அவரது தாய் கலைவாணி (64) மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

விசாரணையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சபாபதிக்கு தீ வைத்தது உறுதியாக நிரூபிக்கப்பட்டது. சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. மேலும் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
