கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மகள்... காப்பாற்ற குதித்த தந்தை உயிரிழப்பு!
கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மகளைக் காப்பாற்றுவதற்காக குதித்த தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பக்காப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பனம்பட்டியில் சோகமான சம்பவம் நடந்தது. அண்ணாதுரை (55) என்பவரின் மகள் தனலட்சுமி (19), குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாய பாசன கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.

இதைக் கண்ட தந்தை அண்ணாதுரை மகளைக் காப்பாற்ற உடனே கிணற்றில் குதித்தார். மது போதையில் இருந்ததாக கூறப்படும் அண்ணாதுரை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த குளித்தலை தீயணைப்புத் துறையினர் நள்ளிரவில் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றின் சுவரைப் பிடித்து தத்தளித்த தனலட்சுமி உயிருடன் மீட்கப்பட்டார். அண்ணாதுரை சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
