பகீர் வீடியோ... மனைவி பிடித்திருக்க மரக்கட்டையால் அடித்து தாக்கிய மகள்கள்... தந்தை தூக்கிட்டு தற்கொலை!

மத்திய பிரதேச மாநிலத்தில் முரைனா மாவட்டத்தில் சிட்டி கோத்வாலி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஹரேந்திர மௌர்யா. இவர் எலக்ட்ரிக் மெக்கானிக் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன். மார்ச் 1 ம் தேதி இவரது 2 மகள்களுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இவருடைய மனைவி இவரிடம் தான் தனது பெற்றோருடன் இருப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.
இதனால் மன அழுத்தம் அடைந்த ஹரேந்திரா தன்னுடைய வீட்டின் அறையில் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியுள்ளது. அதில் ஹரேந்திராவை அவரது மனைவி பிடித்திருக்க 2 மகள்கள் அவரை மரக்கட்டையால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்துன காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!