குப்பைத் தொட்டியில் மகளின் உடை.. பிரபல ரவுடியை சுற்றி வளைத்து கொன்ற நண்பர்கள்!

 
அஜய்

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜய் (எ) பம்ப் அஜய் (23). பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம்வந்த இவர் மீது கொலை, கொள்ளை மற்றும் கொலை முயற்சி உட்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இரவில் அஜய் தனது  நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து சேர்ந்து மது குடித்தார். 

அஜய்

மது குடித்த சில நேரங்களில் போதை தலைக்கேறிய நிலையில், அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் அஜய், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டினார். மற்றவர்கள் அவரை சூழந்துகொண்டு அவரிடம் இருந்த கத்தியை பறித்து, அஜயை சரமாரியாக குத்தினர். இதில் நிலைகுலைந்த அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது கொலையில் தொடர்புடைய ஜீவா (21), அன்பரசன் என்ற இன்பா (25), விக்கி என்ற சொல்லியூஷ் விக்கி (28) மற்றும் 2 சிறார்கள் என 5 பேரை கைது செய்தனர்.

அஜய்

விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரவுடி அஜய், நண்பர்களுடன் மதுகுடிக்க வந்த போது தனது மகள் உடைகளை ஒரு பையில் வைத்து கொண்டு வந்துள்ளார். அந்த பையை எடுத்து நண்பர்கள் விளையாடியுள்ளனர். மது போதையில் அந்த பையை நண்பர்கள் அருகில் உள்ள குப்பை தொட்டியில் மறைத்து வைத்து விட்டனர்.

தனது மகளின் ஆடையை எப்படி குப்பை தொட்டியில் போடலாம் என கோபமடைந்து நண்பர்களுடன் மோதலில் ஈடுபட்டார். இதனையடுத்து மது போதை தகராறில் நண்பர்களே ரவுடியை கத்தியால் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தண்டையார் பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web