மகள் பலி... ரூ.260 கோடி இழப்பீடு அறிவிக்கும் முன் தந்தை மரணம்!

 
அமெரிக்கா ஜான்வி

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஜான்வி, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் உலகளாவிய கவனத்தைப் பெற்ற நிலையில், தற்போது இந்த வழக்கில் ஒரு முக்கியத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சியாட்டில் நகரில் சாலையைக் கடக்க முயன்ற ஜாஹ்னவி மீது, அதிவேகமாக வந்த போலீஸ் கார் மோதியது. விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் கெவின் டேவ், ஜாஹ்னவியின் மரணத்தை மிகவும் அலட்சியமாகக் கேலி செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம் ஜாஹ்னவியின் குடும்பத்திற்கு 260 கோடி ரூபாய் ($31 Million approx) இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. ஜாஹ்னவியின் உயிருக்கு விலை நிர்ணயிக்க முடியாது என்றாலும், அந்தத் துறையின் அலட்சியத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜாஹ்னவியின் தந்தை கந்துலா ஸ்ரீகாந்த் (52) மாரடைப்பால் உயிரிழந்தார்.

 ஜான்வி கந்துல்லா

ஆந்திரப் பிரதேச காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஸ்ரீகாந்த், தனது மகளின் மரணத்திற்குப் பிறகு கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வந்த அவர், இறுதியாக அந்த நீதி கிடைத்த செய்தியைக் கூடக் கேட்க முடியாமல் காலமானது அக்குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.

ஒரே மகளை இழந்து தவித்த அந்தத் தாய்க்கு, தற்போது கணவனும் இல்லாமல் போனது ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறியுள்ளது. "பணம் என்பது எங்கள் மகளுக்கு மாற்றாகாது, ஆனால் அந்த அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது" என ஸ்ரீகாந்த் உயிருடன் இருந்தபோது கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!