மகள் உயிருடன் இருக்கும்போதே இறுதிச்சடங்கு... சுடுகாட்டில் பெற்றோர் செய்த விபரீதம்!

 
இறுதிசடங்கு

மத்திய பிரதேச மாநிலத்தில், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு, அவர் உயிருடன் இருக்கும் போதே பெற்றோர் இறுதிச்சடங்கு செய்துள்ள கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆசை ஆசையாக வளர்த்த மகள், தங்களை விட்டுவிட்டுச் சென்ற ஆத்திரத்தில், அவர் இறந்துவிட்டதாகக் கருதிச் சுடுகாட்டிற்குப் பாடை கட்டி இழுத்துச் சென்று உருவபொம்மையை எரித்த பெற்றோரின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண், தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாகத் தான் காதலித்த இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்டுள்ளார். தங்கள் சொல்லுக்குக் கட்டுப்படாமல், வளர்த்த பாசத்தையும் மதிக்காமல் மகள் சென்றது அவரது பெற்றோருக்குக் கடும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் தந்தது. ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அவர்கள், "இனி அவள் எங்களுக்கு மகள் இல்லை, அவள் இறந்துவிட்டாள்" என்று ஊர் அறிய அறிவித்தனர்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து, மகளின் உருவப்பொம்மை ஒன்றைத் தயாரித்தனர். அதற்குப் புத்தாடை அணிவித்து, உயிருள்ள மனிதர்களுக்குச் செய்வது போலவே பாடைகட்டி மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சுடுகாட்டிற்கு இழுத்துச் சென்றனர். அங்குச் சிதையை மூட்டி, அந்த உருவபொம்மைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து எரித்தனர். தங்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வளர்த்தும், தங்களை மதிக்காமல் சென்றதால் இனி அவள் தங்களுக்குச் செத்ததற்குச் சமம் என்று அழுது கொண்டே அவர்கள் கூறியது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.

காதல் திருமணங்களால் குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசலும், கௌரவத்திற்காகப் பெற்றோர் எடுக்கும் இத்தகைய விபரீத முடிவுகளும் சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பியுள்ளன. பெத்த மனம் பித்தாகக் கிடந்தாலும், ஆத்திரம் கண்ணை மறைக்கும்போது பாசமான உறவுகளும் பகையாக மாறிவிடுவதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!