நாளை தவெக ஆண்டு விழா.. பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்கிறார்... ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் நாளை பிப்ரவரி 25ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா நடைபெறவுள்ள நிலையில், மாமல்லபுரம் பூஞ்சேரியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளைய ஆண்டு விழாவில் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்கிறார்.
நாளை தமிழகம் முழுவதும் தவெக மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் மேடையிலே அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதற்கான பணிகளை கட்சியின் தலைமைக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் கூட்டணி தொடர்பாகவும் தவெக தலைவர் விஜய் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கட்சி நிா்வாகிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கான பாதைகள், வாகனக்கள் நிறுத்துமிடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், விஜய் வந்து செல்வதற்கான பாதை, சுமாா் 2000 பேருக்கு சைவ, அசைவ உணவு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!