டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு... 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

 
ஐபிஎஸ் பணியிட மாற்றம்

நாளை 2026ம் ஆண்டு புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில், தமிழகக் காவல்துறையில் நள்ளிரவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நாளை பல அதிகாரிகள் ஓய்வு பெற உள்ள நிலையில், நேற்றிரவு ஒரே உத்தரவில் சுமார் 70 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மூத்த அதிகாரிகள் பலருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் முக்கியப் பொறுப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த 1995-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் புதிய பொறுப்பாக ஆயுதப்படை பிரிவின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது இந்தப் பதவி உயர்வு காவல்துறையில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஐபிஎஸ்

டேவிட்சன் தேவாசீர்வாதத்தைப் போலவே, மேலும் இரு மூத்த அதிகாரிகளுக்குத் தரம் உயர்த்தப்பட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சைபர் கிரைம் ஏடிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல், அதே பிரிவில் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த பால நாகதேவி, தற்போது பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். அத்துடன் அவர் சிவில் சப்ளை சிஐடி பிரிவின் டிஜிபி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்தும் வகையில், காவல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தென்மண்டல ஐஜியாகப் பணியாற்றிய பிரேம் ஆனந்த் சின்கா, ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் கமிஷனர்: ஏடிஜிபி அமல்ராஜ், மீண்டும் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அங்கிருந்த அபின் தினேஷ் மொடாக், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலகம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி பிரிவில் ஐஜியாக இருந்த அன்பு, ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று அதே பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மேற்கு மண்டல ஐஜியாக இருந்த செந்தில்குமார், டிஜிபி அலுவலகத் தலைமையக ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

புத்தாண்டு தினத்தில் பல மூத்த அதிகாரிகள் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டும், 2026-ம் ஆண்டின் நிர்வாக வசதிக்காகவும் இந்த "இரவோடு இரவான" அதிரடி இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!