உயிரிழந்த நாய் மீண்டும் உயிர்ப்புடன்... சினிமாவை மிஞ்சும் நிஜ அறிவியல் !

 
உயிரிழந்த நாய் மீண்டும் உயிர்ப்புடன்... சினிமாவை மிஞ்சும் நிஜ அறிவியல் !
 சீனாவில்  குளோனிங் முறையில் பிராணிகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற தொழில்நுட்ப வாய்ப்புகளை சீனா தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி சீனாவில் உள்ள ஹாங்சோவில் வசித்து வரும் பெண் ஷு. இவர்  2011ல்  தனது செல்லப் பிராணியான ஜோக்கர் நாயை மிகவும் பாசத்தோடு, பராமரிப்போடு வளர்த்து வந்தார். ஜோக்கர் அவருக்கு பாதுகாப்பு மட்டுமல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் உறுதுணையாக இருந்து வந்தது. இந்நிலையில் ஷூ வளர்த்து வந்த செல்லப்பிராணியான ஜோக்கர் இதய குறைபாடுடன 2022 நவம்பரில் உயிரிழந்தது.  

உயிரிழந்த நாய் மீண்டும் உயிர்ப்புடன்... சினிமாவை மிஞ்சும் நிஜ அறிவியல் !

இதனை அடுத்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்த ஷு மருத்துவப் பின்னணியை கொண்டவர். இதனையடுத்து  சீனாவில் செல்லப்பிராணி குளோனிங் பற்றிய வளர்ச்சியை கவனித்து வந்தார்.   ஒரு தனியார் நிறுவனத்தை அணுகி முழு கட்டணத்தையும் செலுத்தி ஜோக்கரின் தோலிலிருந்து மாதிரிகளை கொடுத்து ஒரு பிறப்பு குட்டியை குளோனிங் முறையில் உருவாக்கி உள்ளார். 

உயிரிழந்த நாய் மீண்டும் உயிர்ப்புடன்... சினிமாவை மிஞ்சும் நிஜ அறிவியல் !

இந்த முறையில் கடந்த 2024 ம் ஆண்டு சீன புத்தாண்டுக்கு முன்பு ஷு தனது புதிய செல்லப் பிராணியை பெற்றார். இதனை அடுத்து அதற்கு “லிட்டில் ஜோக்கர்” என பெயரிட்டுள்ளார். க்ளோனிங் முறையில் பெறப்பட்ட செல்லப்பிராணி தனது ஜோக்கர் நாய் போன்ற சில செயல்களில் ஒத்து செல்கிறது என்பதையும் தனது துக்கத்தை குறைக்க உதவுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web