டிசம்பர் 7 வரை வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற அவகாசம் நீட்டிப்பு !

 
நாய்
 

சென்னையில் செல்லப்பிராணி நாய்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்ட போது, ஒரு வாரத்துக்குள் இதற்கான அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நகரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நாய்களை கயிறு கட்டாமல் வெளியே அழைத்துச் செல்லக்கூடாது என்ற விதி கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை மீறுவோருக்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும், ஒரு வீட்டில் 4 நாய்களுக்கு மேல் வளர்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, செல்லப்பிராணி நாய்களை வைத்திருக்கும் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிமம் பெற்றுக்கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!