நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

 
நீட் நுழைவுத்  தேர்வு

இந்தியாவில் மருத்துவக் கல்வி பயில நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். இதனையடுத்து இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நீட் தேர்வுகள்  மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

நீட் தேர்வு
அந்த வகையில் 2023-24ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7ம் தேதியாக  நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மார்ச் 6 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வுக்கு நாளை முதல்  ஏப்ரல் 13ம் தேதி இரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்
இது குறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.3 மணிநேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இடம் பெறும். இயற்பியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், உயிரியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.கேள்விகள் பல்குறித்தேர்வு  வினாக்களாக இருக்கும். அதாவது, ஒவ்வொரு வினாவிற்கு சரியான விடை உட்பட நான்கு விடைகள் இடம்பெறும். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா, உருது, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும். விண்ணப்பிக்கும் போதே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web