பொங்கல் பரிசு பெற இன்றே கடைசி... மிஸ் பண்ணாதீங்க!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் கடந்த 5 நாட்களாக நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

ரொக்கம் ரூ.3,000, வேட்டி, சேலை, ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. இதுவரை 24,924 நியாய விலைக் கடைகள் மூலம் 2.04 கோடி குடும்பங்களுக்கு ரூ.6,123 கோடி ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. காலை, மாலை நேரங்களில் மக்கள் ஆர்வமுடன் பரிசுத் தொகுப்பை பெற்றுச் சென்றனர்.

இந்நிலையில் சுமார் 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இன்னும் பரிசு பெறவில்லை. வெளியூர்களில் வேலை செய்வோர் சொந்த ஊருக்கு வர முடியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நாளை (ஜனவரி 14) வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கால அவகாசம் நீட்டிப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
