பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் பயங்கர தாக்குதல்... 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2 நாட்களாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் பெருமளவிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 26 ஆகிய தேதிகளில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், மூன்று முக்கிய மாவட்டங்களில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கலாட்டில் அதிகபட்சமாக 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கோலு பகுதியில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பஞ்ச்கூர் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு (ISPR) தெரிவித்துள்ளது.

வளங்கள் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தைப் பாகிஸ்தானிடம் இருந்து பிரித்து தனிநாடாக உருவாக்க வேண்டும் எனப் பல ஆயுதம் ஏந்திய அமைப்புகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. அதே சமயம், பாகிஸ்தான் அரசு அங்குள்ள மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும், போராட்டங்களை ஒடுக்க வன்முறையைக் கையாளுவதாகவும் சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், எஞ்சிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
