தவெக வேட்பாளராக 10 கோடி வரை பேரம்.... கட்சியில் பெரும் பரபரப்பு!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் அருள்ராஜ் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொகுதியில் போட்டியிட விரும்புவோரிடம் 10 கோடி வரை பேரம் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கக்கூடாது என சக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். பலமுறை பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

கட்சியில் இணையும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், கொலை குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு முக்கியப் பதவிகள் வழங்கியதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அருள்ராஜை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையும் மீறி அவருக்கு பதவி வழங்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கடந்த 40 ஆண்டுகளாக கட்சிப் பணியில் இருக்கும் குடமுருட்டி கரிகாலனுக்கு பொறுப்பு வழங்காமல், தனிப்பட்ட வன்மத்துடன் பொதுச் செயலாளர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் தூத்துக்குடியில் புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த விவகாரம் தவெக-வில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூரில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
