சீமானை சமாளிக்கிறது எங்களுக்கு தூசு மாதிரி!

 
ரகுபதி

சீமான் விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் வழக்கு பதிவு செய்து இந்த வழக்குகள் நடந்து வருகிறது, சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி. அவர் ஒரு பிரச்சினையே கிடையாது

தென் இந்திய நலனுக்காக நடத்தப்படுகின்ற அனைத்து கட்சி கூட்டம். தென்னிந்திய நலனில் அக்கறை இல்லாத கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றால் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை

*தெலுங்கானா கர்நாடகா போன்ற முதலமைச்சர்கள் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் இன்னும் பொறுத்திருந்து இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வட மாநிலங்களில் தொகுதிகள் குறைகின்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் இதற்கு நிச்சயமாக குரல் எழுப்புவார்கள். இதில் எந்த சந்தேகமும் கிடையாது..... புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

  
மார்ச் ஒன்றை நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் நேற்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றைய தினம் பிறந்த 16 குழந்தைகளுக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் தங்க மோதிரங்களை குழந்தைகளுக்கு வழங்கினர். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்:

அமைச்சர் ரகுபதி


சீமான் வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு. ஏற்கனவே இதில் புகார் தரராக உள்ள பெண்மணி சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் வழக்கு பதிவு செய்து இந்த வழக்குகள் நடந்து வருகிறது. அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் திமுக விற்கு எந்த பின்புலமும் கிடையாது என்று. 

சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி. அவர் ஒரு பிரச்சினையே கிடையாது. நாங்கள் இதில் தலையிட்டு இருந்தால் வழக்கை எப்படியெல்லாம் திசை திருப்பி இருக்கலாம். நாங்கள் தலையிடவில்லை. சீமான் தான் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கில் நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமையானது இது என்று கூறியது நீதிமன்றம் தந்த அழுத்தத்தில்தான் இந்த வழக்கு நடைபெறுகிறது தவிர திமுகவின் அடுத்ததால் நாங்கள் சீமானை கண்டு பயந்தோ இந்த வழக்கு நடைபெறவில்லை. 

சீமான் மீது 72க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. எல்லா வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. நிச்சயமாக அப்படியே நடக்கும். 

ரகுபதி

இரண்டு தினங்களுக்கு முன்னால் நடந்த விழாவில் சிறப்பாக தெளிவாக தனது நிலைப்பாட்டை திருமாவளவன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அது ஒன்று போதும். இந்த கூட்டணி தான் தொடரும் இதுதான் இந்தியா கூட்டணி தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். இந்த கூட்டணி முன்னெடுக்கின்ற கொள்கைதான் இந்தியாவுக்கு வழிகாட்டுகின்ற கொள்கையாக அமையும் என்றெல்லாம் வலியுறுத்தி கூறி முதலமைச்சர் தலைமையில் இயங்குகின்ற இந்த கூட்டணிக்கு முழு ஆதரவையும் திருமாவளவன் தெரிவித்துள்ளார் அதைப்பற்றி எந்த பிரச்சனையும் கிடையாது. 

அனைத்து கட்சி கூட்டம் கூட்டியதற்கான காரணம் தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது ஒரு இடம் கூட குறையக்கூடாது அதே நிலையில் வட மாநிலத்தில் ஒரு இடம் கூட கூட்டக்கூடாது இதே மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் தொகுதி மறுசீரமைப்பு இது எண்ணிக்கை அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தென் இந்திய நலனுக்காக நடத்தப்படுகின்ற அனைத்து கட்சி கூட்டம். தென்னிந்திய நலனில் அக்கறை இல்லாத கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றால் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. 

ஆன்லைன் விவகாரத்தில் நாங்கள் சட்டம் கொண்டு வந்துள்ளோம் அது நீதிமன்றத்தில் இருக்கிறது சட்டப்படி நாங்கள் அதில் செயல்படுவோம். 

தெலுங்கானா கர்நாடகா போன்ற முதலமைச்சர்கள் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் இன்னும் பொறுத்திருந்து இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வட மாநிலங்களில் தொகுதிகள் குறைகின்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் இதற்கு நிச்சயமாக குரல் எழுப்புவார்கள். இதில் எந்த சந்தேகமும் கிடையாது என்று தெரிவித்தார்.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web