பத்திரம் மக்களே... இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்... வானிலை மையம் எச்சரிக்கை!

 
வெயில்


பத்திரமாக இருங்க மக்களே... வெயில் நேரத்தில் அதிகளவில் நீர் சத்துள்ள உணவை எடுத்துக்கோங்க. கூடுமானவரை அசைவ உணவைத் தவிர்த்திடுங்க. தமிழகத்தில் இன்று மார்ச் மாதம் 27ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவசியமில்லாமல் வீட்டை விட்டு பகல் 11 மணி  முதல் மாலை வரை சுற்றாதீங்க. கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறியவர்களை வெயில் நேரத்தில் தனியே வெளியே அனுப்பாதீங்க. 

வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக வேலூரில் 99.7 டிகிரி வெப்பமும், குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 48.2 டிகிரி பாரன்கீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 90 டிகிரியும், நெல்லையில் 94.1 டிகிரியும், கன்னியாகுமரியில் 95 டிகிரி பாரன்கீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

வெயில்

இந்நிலையில் இன்று மார்ச் 27ம் தேதி வியாழக்கிழமை முதல் 29ம் தேதி சனிக்கிழமை வரையிலான 3 நாட்கள் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி சென்டிகிரேட் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பத்திரம் மக்களே தேவையான அளவு நீர்சத்து கிடைப்பதையும் உறுதிபடுத்திக்கோங்க.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web