மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘ஜாக்பாட்’... 60 சதவீதமாக உயரும் அகவிலைப்படி?!
சுமார் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த ‘சுப செய்தி’ இன்று வெளியாக அதிக வாய்ப்புள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தாலும் தவித்து வரும் அரசு ஊழியர்களுக்குப் பெரிய நிம்மதி கிடைக்கவுள்ளது.

தற்போது வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, நேரிடையாக 2 சதவீத உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த டிசம்பர் மாத நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI-IW) தரவுகளின் அடிப்படையில், இந்த உயர்வு கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக மார்ச் மாத இறுதியில் இத்தகைய அறிவிப்புகள் வெளியாவது வழக்கம் என்பதால், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி, 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைப்பது குறித்தும் ஏதேனும் முக்கியத் தகவல் வெளியாகுமா என ஊழியர் சங்கங்கள் உற்றுநோக்கி வருகின்றன. இந்த 2 சதவீத உயர்வு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தைப் பொறுத்து மாதந்தோறும் கணிசமான தொகை கூடுதலாகக் கிடைக்கும். ஏற்கனவே ஹோலி பண்டிகை முடிந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
