விசாரணைக் கைதி மரணம்… 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

 
aakash aakash

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்த மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம்

மானாமதுரை சியோன் நகர் பகுதியில் நடந்த வாள் வெட்டு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26) என்பவரை காவல்துறையினர் பிடிக்க சென்றனர். அப்போது தப்பிச் செல்ல முயன்ற அவர் கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஆகாஷ் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரி குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!