குற்றவாளிக்கு 80000 பேர் முன்னிலையில் மரண தண்டணை... சுட்டுக் கொன்ற 13 வயது சிறுவன்!

 
ஆப்கானிஸ்தான்
 

ஆப்கானிஸ்தானில் 2021-ல் தலிபான் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து கடுமையான இஸ்லாமிக் சட்டங்கள், பொதுமக்கள் முன்னிலேயே வழங்கப்படும் மரண தண்டனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதில் ஒன்றாக, 9 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை கொன்ற மங்கள் கான் என்ற குற்றவாளிக்கு நேற்று கோஸ்ட் நகரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கோஸ்ட் நகர மைதானத்தில் சுமார் 80,000 பொதுமக்கள் கூடியிருந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் அந்த தண்டனையை நேரில் கண்டனர். குறிப்பாக, நீதிமன்ற அனுமதியுடன், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே குற்றவாளியை துப்பாக்கியால் ஐந்து முறை சுட்டுத் தள்ளியதும் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் மன்னிப்பு வழங்க முன்வந்தபோதும், குடும்பத்தினர் அதை மறுத்து மரண தண்டனையே வேண்டும் என வலியுறுத்தினர்.

தலிபான் ஆட்சி தொடங்கிய பின்பு இதுவே 11-வது பொதுவெளி மரண தண்டனை. மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியிட்டு வந்தாலும், தலிபான் அரசு “நாட்டின் சட்டப்படி நடந்த தண்டனையே இது” என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!