ஸ்கூட்டியில் மரண ஸ்டண்ட்... பகீர் வீடியோ!

 
பைக் சண்டை
 

கோவாவின் பிஸியான சாலையில் ஸ்கூட்டரை ‘ஸ்டண்ட் மேடையாக்கி’ ஆபத்தான சாகசம் செய்த இரு இளைஞர்கள் பற்றிய வீடியோ இணையத்தை கலக்குகிறது. மஞ்சள் டி-ஷர்ட் அணிந்த இளைஞர் ஓட்டிய ஸ்கூட்டரில் நேராக நிமிர்ந்து நிற்க, பின்னால் இன்னொருவர் அமர்ந்து பயணித்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றியிருந்த வாகன ஓட்டிகள் பலமுறை எச்சரித்தும், ஹெல்மெட் இன்றி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் கவனிக்காதது தெளிவாகப் பதிவானது.

பரபரப்பான சாலையில் இப்படியான சாகசம், அவர்கள் இருவரின் உயிரையே குடித்துவிடலாம். அருகிலிருந்த வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் அபாயத்தில் தள்ளியதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். “வைரலுக்காக உயிரோட விளையாட வேண்டியதா?” “புகழை தேடி அல்ல, சாவை தேடி” என பலர் கருத்து பதிவு செய்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சட்டநடவடிக்கை தேவை என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவாவில் இளைஞர்களின் சாலை ஸ்டண்ட் சம்பவங்கள் புதிதல்ல என்றாலும், இந்த வீடியோ மீண்டும் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. விதிமீறலை மீறியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பாதுகாப்பை புறக்கணித்து பிரபலமாவதற்கான இந்த முயற்சி, சமூகத்தையே பதற வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!