கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் மீது கொலை மிரட்டல் புகார்!

 
கோவில்பட்டி
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச போலீஸ்

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவராக இருக்கும் க.தமிழரசன் கோவில்பட்டியில் பொது மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள், பொதுநலப் பிரச்சனைகள், அரசு திட்டங்கள் முறையாக லஞ்சலாவன்யங்கள் இல்லாமல் மக்களுக்கு சென்று சேரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டங்கள் நடத்துவது, மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறார். 

மேலும் இவர் இந்திய கலாச்சார நட்புறவு கழகம், மற்றும் பல்வேறு தொழில் சங்கங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்து செயல்பட்டு வருகிறார். இவரை அச்சுறுத்தும் வகையில் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி கொலைமிரட்டல் விடுத்து பேசியுள்ளதாள் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு புகார் அளிக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது