அதிர்ச்சி!! தமிழகத்தில் வெயிலுக்கு உயிர்ப்பலி!!

 
வெயில்

தமிழகத்தில்  வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம், புயல் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சியது காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் 18பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. . 

வெயில்

வழக்கத்தை காட்டிலும் வெயில் அதிகமாக இருப்பததால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறுகளை வாங்கி மக்கள் குடித்து வருகின்றனர்.இந்நிலையில், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் 48 வயதுமிக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொய்கை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிய போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்! பொதுமக்கள் அவதி!

ஏற்கனவே மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வெயிலில் 3 கிமீ நடந்து சென்றதால் நேற்று உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் வெயிலால் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த முருகன் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து மற்றும் சிகிச்சை எடுத்து வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web