ஹாங்காங் தீவிபத்தில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு... 279 பேர் மாயம்!

 
ஹாங்காங்
 

ஹாங்காங்கில் தாய்போ மாவட்டத்தில் உள்ள ஒரு உயர்மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பேரழிவு தீவிபத்து, படுகொலைவெளி போன்ற சூழல் உருவாக்கியுள்ளது. புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இந்த தீ, கண்முன்னே பல மாடிகளை விழுங்கி அருகிலுள்ள கட்டடங்களுக்கும் பரவியது. வெடிக்கும் தீக்குமிழ்கள், அடர்ந்த கரும்புகை,  முழுப் பகுதியும் நெருப்பு வளைகுடா போல மாறி காணப்பட்டது.

தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்த 279 பேர் இதுவரை காணாமல் போயிருக்கின்றனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் நிலவரத்தை இன்னும் கவலைக்குரியதாக்கியுள்ளது. இருப்பிடங்களின் இடிபாடுகள், புகைமூட்டம், வெப்பம் — அனைத்துமே மீட்புப் பணியை சவாலானதாக மாற்றியுள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் ஒரே சமயம் களமிறங்கி, 18 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் தன்னலமின்றி ஈடுபட்ட 37 வயது தீயணைப்பு வீரர் உயிரிழந்ததும் நாட்டை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.தீவிபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், அந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் 3 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள், அனுமதி விதிமுறைகள் மீறல் உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!