தென்காசி பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு... பலர் கவலைக்கிடம்!

 
பேருந்து

தென்காசியில் பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கொல்லம்–திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பயங்கர விபத்து நடைபெற்றது. காமராஜர்புரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுக்கு ஒன்று எதிரே வந்தபோது வேகத்தில் மோதியதால் சம்பவ இடமே கலக்கமாக மாறியது. மோதிய தருணத்திலேயே, சம்பவ இடத்திலேயே 6 பயணிகள் உயிரிழந்தனர்.

தென்காசி

இது குறித்த தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் அவசரமாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டுச் சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். விபத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து

பின்னர் சிகிச்சை பலனின்றி  மேலும் இருவர் உயிரிழந்த நிலையில், இந்த துயர விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!