பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு!

 
சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொந்தனா பகுதியில் உள்ள பாரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. சுமார் 300 பேர் கொள்ளளவு கொண்ட அந்த பாரில் நள்ளிரவைத் தாண்டி இசை முழங்க மக்கள் உற்சாகமாக இருந்தனர். அதிகாலை 2 மணிக்கு பார் மூடப்பட வேண்டிய நிலையில் சரியாக 1.30 மணி அளவில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது.

வெடிவிபத்து ஏற்பட்டவுடன் பாரில் கரும்புகை சூழ்ந்து கொண்டதால் எங்கும் இருள் மயமானது. உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் அலறினர். இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 47 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்து சுவிட்சர்லாந்து நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் நினைவாக அந்த நாட்டில் 5 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!