வணிக வளாகத்தில் தீ விபத்து: கராச்சியில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு - ஒரு கடையில் மட்டுமே 30 பேர் பலி!

 
கராச்சி தீ விபத்து கராச்சி தீ விபத்து

கராச்சியின் பரபரப்பான எம்.ஏ. ஜின்னா சாலையில் அமைந்துள்ள 'குல் பிளாசா' வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்தது.

வணிக வளாகத்தின் ஒரு தளத்தில் உள்ள 'துபாய் கிராக்கரி' என்ற பாத்திரக் கடையிலிருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. புகை மூட்டத்தால் வெளியேற வழியின்றி இவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து!

முதற்கட்ட விசாரணையில், ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பிடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. 1,200 கடைகளைக் கொண்ட இந்த வளாகத்தில், தீயினால் ஏற்பட்ட அடர்த்தியான கரும்புகை மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதைத் தடுத்தது. 7 தீயணைப்பு வாகனங்கள் ஒரு நாள் முழுவதும் போராடியே தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன.

விபத்து நடந்த அன்று வார இறுதி விடுமுறை என்பதால், வழக்கத்தை விட அதிகமான வாடிக்கையாளர்கள் வளாகத்தில் இருந்ததே உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்தது. இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் நடத்திய ஆய்வில் வெடிபொருட்களுக்கான எந்தச் சான்றுகளும் கிடைக்கவில்லை.

தீ தீயணைப்பு வெடிவிபத்து பட்டாசு

மீட்கப்பட்ட பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகியுள்ளன. எனவே, மரபணு (DNA) பரிசோதனைக்குப் பிறகே பலியானவர்களின் இறுதி விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என டி.ஐ.ஜி சையது ஆசாத் ரசா தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!