தந்தை இறப்பை தாங்க முடியாமல் மகனும் மாரடைப்பால் பலியான சோகம்!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயதில் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருவது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் 28 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
⚠️ Trigger Warning : Sensitive Visual⚠️
— Sachin Gupta (@SachinGuptaUP) March 22, 2025
जिंदगी–मौत का कुछ नहीं पता। इस Video को देखिए। 20 सेकेंड पहले तक जो इंसान एकदम फिट दिखाई दे रहा है, वो अचानक से मर जाता है।
📍बुलंदशहर, यूपी pic.twitter.com/9jiDgbC2ay
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷர் மாவட்டம் மதன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் சவுத்ரி (28). இவர், நேற்று காலை தனது வீட்டிற்கு வெளியே நிற்கிறார். அப்போது அந்த வழியே செல்லும் ஒரு நபர், சவுத்ரியை வரவேற்று, அவரது தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு நடந்து செல்கிறார். பின்னர் அவரையே பார்த்துக் கொண்டு நிற்கும் அமித், அடுத்த சில நொடிகளில் அப்படியே சரிந்து கீழே விழுகிறார். அவருக்கு முதலுதவி அளித்தபோதும் பயனில்லை. இறுதியில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம் அதே மாநிலத்தில், இளைஞர் ஒருவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்காக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவருக்கும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரில் வசித்து வருபவர் லைக் அகமது. இவர் மார்ச் 20 ம் தேதி தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். மருத்துவர்களின் அந்த முடிவை ஏற்க மறுத்த அவரது மகன் அதிக், தனது தந்தையின் உடலை ஆம்புலன்ஸில் வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும் அவரது மரணத்தை உறுதி செய்தனர்.
பின்னர், அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்தபடியே அதிக், நண்பரின் பைக்கில் சென்றார். ஆனால், வழியிலேயே அவர் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை, மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதனையடுத்து தந்தை மற்றும் மகன் இருவரின் இறுதிச்சடங்குகளும் ஒன்றாக நடைபெற்றது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!