இத முடிக்க டிசம்பர் 31 தான் கடைசி … தவறினால் அபராதம், இழப்பு, சிக்கல்!
2024–2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31, 2025க்குள் அவசியம் செய்து முடிக்க வேண்டும். தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால் ரூ.1,000 அபராதமும், ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதமும் வசூலிக்கப்படும். டிசம்பர் 31க்குள் தாமத ஐடிஆர் கூட தாக்கல் செய்யவில்லை என்றால், ரீஃபண்ட் தாமதம் அல்லது நிறுத்தம், வட்டி மற்றும் கூடுதல் வரி சுமை ஏற்படும்.

தொடர்ந்து ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்களின் டாக்ஸ் புரொஃபைல் பலவீனமாகும். வங்கி கடன், வீட்டு கடன், கிரெடிட் கார்டு, விசா விண்ணப்பங்களில் சிக்கல் ஏற்படலாம். வருமானவரி துறையின் கண்காணிப்பு அதிகரித்து நோட்டீஸ் வரும் வாய்ப்பும் உள்ளது. இதனுடன், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். டிசம்பர் 31க்குள் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழக்கும். வரி தாக்கல், வங்கி பரிவர்த்தனை, முதலீடுகள் அனைத்தும் பாதிக்கப்படும்.

இதே நாளே முக்கிய அரசு திட்டங்களுக்கும் கடைசி தேதி. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் வீடு கட்ட ரூ.2.5 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவிலும் பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி நாள். உறைபனி, மழை போன்ற காரணங்களால் பயிர் சேதமடைந்தால் முழு இழப்பீடு வழங்கப்படும். ஒரு தேதி… பல தீர்மானங்கள்… தவற விடாதீர்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
