மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றுவது இனி நடக்காது... அண்ணாமலை பதிலடி!

தமிழகத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் அரசை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என தரவுகளோடு நாளிதழில் வெளியான செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு,… https://t.co/C6m3Si6FWY pic.twitter.com/h6Kf2uHxDw
— K.Annamalai (@annamalai_k) June 14, 2025
தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது.
உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!