சபரிமலை தங்க அபகரிப்பு விசாரணை ... நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!
சபரிமலை அய்யப்பன் கோவில் துவார பாலகர் சிலைகள், கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகள் அபகரிப்பு விவகாரம் தொடர்ந்து அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. கேரள ஐகோர்ட்டின் உத்தரவின்பேரில் ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வருகிறது. தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி, தங்கத்தை தாமிரமாக சான்றளித்த முன்னாள் தேவசம் போர்டு அதிகாரி முராரி பாபு உட்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் வரும் டிசம்பர் 9, 11ஆம் தேதிகளில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் காரணமாக, தேர்தலுக்கு பிறகே அவர் விசாரணைக்கு வரவழைக்கப்படுவார் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கிடையில், துவார பாலகர் சிலைகள் மற்றும் தங்கத் தகடுகள் தாம் வீட்டில் வைத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படும் நடிகர் ஜெயராமை முதலில் கைது செய்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்த வழக்கில் முன்னாள் தேவஸ்தான தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நேற்று நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனுடன், சபரிமலை கோவிலின் மூத்த தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு மோகனரு ஆகியோர் விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
