அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு!

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த இளைஞர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யானை சுட்டுக் கொல்லப்பட்டு, தந்தம் வெட்டி எடுக்கப்பட்ட வழக்கில் தப்பியோடிய இளைஞரா? என தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தந்தம் வெட்டி எடுக்கப்பட்ட வழக்கில் தந்தை, மகன்கள் என 3 பேர் கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தப்பியோடியதாக கூறப்பட்ட இளைஞர் செந்திலின் உடலா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!