ஆவண எழுத்தர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைய தடை!! அதிரடி உத்தரவு!!

 
சார்பதிவாளர் அலுவலகம்

தமிழகம் முழுவதும் அனைத்து   பதிவுத் துறை அலுவலகங்களும்  கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறையில் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக பதிவுத்துறை அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்களின் அராஜக போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் பத்திர பதிவுக்கு வரும் சொத்து விற்பவர்கள், வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக வருவதாக குற்றச்சாட்டுக்களும், புகார்களும் அதிகரித்து வருகிறது.  

சார்பதிவாளர் அலுவலகம்

இந்நிலையில் பதிவு துறையை மேம்படுத்த ஸ்டார் 3.0 என்னும் பதிவுத்துறை செயலி  விரைவில் கொண்டு வரப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவரிடம்  புகார் தரலாம் எனவும்,   பத்திர பதிவுக்கு வருபவர்கள்  பணம் கொண்டுவர தேவையில்லை,  ஏடிஎம் கார்டு மூலமே பதிவு கட்டணத்தை  செலுத்தலாம் எனவும்  கூறப்பட்டுள்ளது.பதிவுத்துறை அலுவலகங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பத்திரம்

அதன்படி 
சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்கள் நுழையத் தடை. 
மீறி உள்ளே நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் இவர்களின்  நடமாட்டத்தை கண்காணிக்க தவறும் சார்பதிவாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே நேரத்தில் அலுவலகப் பணி காரணமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் வரலாம். 
இது தவிர மற்றபடி ஆவணம் எழுதுபவர்கள்  பத்திரப்பதிவு சார்பதிவாளர்  அலுவலகங்களில் நுழையக்கூடாது . 
மாவட்ட பதிவாளர்கள் மண்டல தலைவர்கள் ஆய்வின் போது நடைமுறை பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web