பத்திரம் மக்களே... 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
மழை

தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம்  மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது.

கன மழை

அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதைபோல், 24-04-2025 முதல் 28-04-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

இன்று முதல் ஏப்ரல் 26 வரை  அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28″ செல்சியசாகவும்  இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?