பத்திரம் மக்களே... 4 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
மழை

பத்திரம் மக்களே... இன்று  முதல் அடுத்த 4 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை காலத்திற்கு முன்பாகவே வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வுமையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

கன மழை

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும். நாளை மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இன்று முதல் 7ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.  

மழை

அதேபோல, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  நாளை தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web