பத்திரம் மக்களே... இன்றும், நாளையும் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்!

பத்திரமாக இருங்க மக்களே... கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களை தனியே வெயிலில் அனுப்பாதீங்க. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
அதே சமயம் ஜூன் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையை காட்டிலும் அதிகமாக இருக்கக்கூடும்.அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஓட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கொங்கன், கோவா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த நாள்கிளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குசெல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!