பத்திரப்பதிவு அலுவலகங்கள் மார்ச் மாதம் முழுவதும் அனைத்து சனிக்கிழமைகளும் செயல்படும்!

 
பத்திரப்பதிவு

 தமிழகத்தில்  மார்ச் மாதம் முழுவதுமே  பதிவுத்துறை சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில்  மார்ச் மாதம் முழுவதும் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு

அதன்படி நாளை மார்ச் 1, 8, 15, 22 மற்றும் 29 என  5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். மார்ச் மாதம் என்பதால் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது கணக்குகளை நிறைவு செய்வார்கள்.

பத்திரப்பதிவு

எனவே மார்ச் மாதம் முழுவதும் வரும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை ஆவணங்கள் பதிவு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட உள்ளது.  விடுமுறை நாளில் ஆவணப்பதிவிற்கு கூடுதல் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?