அண்ணாமலை குறித்து யூ-ட்யூபில் அவதூறு... காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தகாத வார்த்தையால் பேசிய குடியாத்தம் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்துள்னர்.
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை மீதும் கட்சியில்' உள்ள பெண்கள் மீதும் அருவருக்ககத்தக்க வகையில் தகாத வார்த்தையால் பேசி சமூக வலைதளமான யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்த திமுகவை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி. தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலைய த்தில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
இதில் பாஜக நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், மாவட்டதுனை தலைவர் சிவராமன், மாவட்டசெயலாலர் வீரமணி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாலர் வேல்முருகன், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வன், விருந்தோம்பல் பிரிவு மாநிலசெயலாலர் பாலமுருகன், ஜடிவிங் மாவட்ட தலைவர் காளிராஜா, மாவட்ட துனைதலைவர் ஜெயக்குமார், முன்னாள் மண்டல் தலைவர்கள் சிவகணேசன், சந்தானகுமார், ஆன்மீக பிரிவு வெள்ளத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!