பெற்றோர்களே உஷார்... திருமணத் தகவல் தளத்தில் பதிவு செய்து 20 பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி!
விழுப்புரம் மயிலம் அருகே வசிக்கும் 29 வயது இளம்பெண் காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். டிஆர்பி தேர்விற்கும் தயாராகி வந்த நிலையில், அவருக்கான திருமண வரன் தேடி குடும்பத்தினர் திருமண தகவல் தளத்தில் பதிவு செய்தனர். அதே தளத்தில் பூவிருந்தமல்லி ஜேஜே நகரை சேர்ந்த அருண்மொழி (36) என்பவரும் பதிவு செய்து இருவரும் கடந்த மார்ச் மாதம் முதல் பழகி வந்தனர்.
அருண்மொழி அடிக்கடி பணமும் நகையும் கேட்டதால், அவரை நம்பிய இளம்பெண் 17 சவரன் நகை, ரூ.2.5 லட்சம், இருசக்கர வாகனம், ஐபோன் என்று பலவற்றை வழங்கினார். பின்னர் அருண்மொழி பேசுவது குறைந்து, கடந்த இரண்டு மாதங்களாக போன் எடுக்காததோடு, பெற்ற பொருட்களையும் திருப்பி தராமல் தவிர்த்து வந்துள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், தனிப்படை போலீசார் அருண்மொழியை கைது செய்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், இதே முறையில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல லட்சங்களை மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் மயிலம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
