டெல்லி குண்டுவெடிப்பு... காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
கடந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்த வழக்கில், தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் நேற்று (டிசம்பர் 1) ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இந்தக் குண்டுவெடிப்பில் கார் ஓட்டிய மருத்துவர் உமர் நபி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்திற்கு முன்பு மருத்துவர்கள் ஆதில் அகமது ரத்தர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் ஷாஹித் ஆகியோர் காஷ்மீர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடித்தவுடன் அமிர் ரஷித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமை (NIA) வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் மேலும் 3 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 6 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மருத்துவர் ஆதில் அகமது ரத்தர் (குல்காம் மாவட்டம்), முஜம்மில் ஷகில் (புல்வாமா மாவட்டம், கோயில் கிராமம்), மத போதகர் முப்தி இர்பான் அகமது வாகே (சோபியான்), அமிர் ரஷித் (புல்வாமா மாவட்டம், சம்பூரா கிராமம்) ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நபர்களின் வீடுகள் உட்பட மேலும் சில இடங்களில் தனித்தனி குழுக்கள் சோதனை நடத்தியதில், ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சோதனை மூலம் மேலும் பல தகவல்கள் மற்றும் துப்புக்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
