டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல் என உறுதி... மேலும் ஒருவர் கைது!

 
டெல்லி
 

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் 13 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது சாதாரண விபத்து அல்ல, திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என என்.ஐ.ஏ. உறுதி செய்த நிலையில், இந்த தாக்குதலை மேற்கொண்டது டாக்டர் உமர் முகமது என டி.என்.ஏ. பரிசோதனையில் கண்டறியப்பட்டது. உமரின் உடல் சிதறி கிடந்த நிலையில், தொடர்ந்து காஷ்மீர், உ.பி., அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிரடி சோதனைகள், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கில் காஷ்மீர் டாக்டர் முசாமில், லக்னோவில் பெண் டாக்டர் ஷாகீன், அரியானாவின் மவுலவி இஷ்தியாக் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், அல்-பலா பல்கலைக்கழகத்துக்கு இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், பஞ்சாப்பின் பதன்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த 45 வயது அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட பலரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் உமருடன் தொடர்புகள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி குண்டு

தொடர்ச்சியாக, தாக்குதல் சதியில் நெருங்கிய பங்காற்றிய அமீர் ரஷீத் அலி என்பவரை என்.ஐ.ஏ. நேற்று கைது செய்தது. காஷ்மீரை சேர்ந்த அலியின் பெயரிலேயே வெடித்த கார் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரை இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, 10 நாள் என்.ஐ.ஏ. காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில், இது முழுமையாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் என என்.ஐ.ஏ. தெளிவுபடுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!