டெல்லி கார் குண்டு வெடிப்பு ஒரு தியாக நடவடிக்கை... மருத்துவர் உமர் நபியின் அதிர்ச்சி தரும் வீடியோ !
செங்கோட்டை அருகே நவம்பர் 10-ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலை நடத்தியவர் டாக்டர் உமர் நபி (34) என அடையாளம் காணப்பட்டார். ஃபரிதாபாது மாவட்டத்தைச் சேர்ந்த இவர், “வெள்ளைக்காலர்” என அழைக்கப்படும் தீவிரவாதக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. வெடிபொருள் நிரப்பப்பட்ட காரைச் செலுத்திய அவரே சம்பவ இடத்தில் பலியாகியிருந்தார்.
#BREAKING | டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி உமர் உன் நபியின் பழைய வீடியோ வெளியாகியுள்ளது
— Spark Media (@SparkMedia_TN) November 18, 2025
தற்கொலைப்படை தாக்குதல்களை ஆதரிக்கும் வகையில் அந்த வீடியோவில் பேசியுள்ளார் pic.twitter.com/8qB1urZ0Ac
இந்த தாக்குதலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பே உமர் நபி பதிவு செய்த வீடியோ ஒன்று இப்போது வெளிவந்துள்ளதால் அதிர்ச்சி அதிகரித்துள்ளது. அதில் தற்கொலை குண்டுவெடிப்பை “உன்னத தியாகச் செயல்” என புகழ்ந்து பேசும் அவர், பொதுமக்கள் அதின் அர்த்தம் அறியாமல் விமர்சிக்கிறார்கள் என வாதிடுகிறார். இஸ்லாமிய சிந்தனைகளை முற்றிலும் தவறாக விளக்கும் இந்த கருத்துகள், அவர் தீவிரவாத சித்தாந்தங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
செங்கோட்டை தாக்குதல் தற்செயலானதல்ல, பெரிய அளவிலான திட்டமிட்ட தற்கொலை தாக்குதலின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்றும், காரில் இருந்த வெடிபொருள் முன்கூட்டியே வெடித்ததால் இழப்பு குறைந்தது என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. உமர் நபியின் தொடர்புகள், நிதி ஆதாரங்கள், ஆன்லைன் வலையமைப்புகள் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் தற்போது என்ஐஏ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
