டெல்லி கார் வெடிப்பு... பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
கடந்த 10-ந் தேதி டெல்லியில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது. இந்த வழக்கில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
டெல்லி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்தனர். பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணையை துவங்கியது. இது தொடர்பாக குற்றத்துடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தொடர் வாகன சோதனைகள் நடைபெற்றுள்ளன; 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதி மீறல்களுக்காக 417 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட 3 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை ராணுவ தரமானதாக இருப்பதால், போலீசார் இதன் மூலம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NIA அதிகாரிகள் தெரிவித்ததாவது, தற்கொலை தாக்குதலில் பயன்படுத்திய காரை வாங்கியவர் அமீர் ரஷீத் அலி ஆவார். இவர் தற்கொலைத் திட்டத்தை வடிவமைத்து இயக்கியவர் என்றும், காரை கொடுப்பதற்காக காஷ்மீரில் இருந்து டெல்லி வந்தவர் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் NIA அதிகாரிகள் கைதாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக இதுவரை 73 பேரிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. வெடிப்புகள் சேகரிக்கப்பட்ட இடங்கள் அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஜம்மு–காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
