டெல்லி கலவர வழக்கு: உமர் காலித், ஷர்ஜில் இமாமுக்கு ஜாமீன் மறுப்பு!
2020ஆம் ஆண்டு டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்ததுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜேஎன்யு மாணவர் உமர் காலித் உள்ளிட்ட 7 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த 7 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில், அவர்களது ஜாமின் மனுக்கள் விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இன்று அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உமர் காலித் மற்றும் ஷர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க முடியாது என்று தெரிவித்தது.

இருவரும் இன்னும் ஒரு ஆண்டு சிறையில் இருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் மீண்டும் ஜாமின் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர். அதே நேரத்தில், இந்த வழக்கில் தொடர்புடைய குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரகுமான், முகமது சலீம், ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. உமர் காலித் விவகாரம் சர்வதேச கவனத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
