டெலிவரி பணியாளர்கள் வேலை நிறுத்தம்...
மளிகை முதல் உணவு, ஆடைகள் வரை அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்யும் ஈ-காமர்ஸ் கலாசாரம் இந்தியாவில் வேகமாக வளர்ந்துள்ளது. இந்த வசதியின் பின்னால், GiG Workers எனப்படும் ஒரு கோடிக்கும் அதிகமான டெலிவரி ஊழியர்கள் நாள் முழுவதும் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் மழை, வெயில், பண்டிகை என எதையும் பொருட்படுத்தாமல் 24 மணி நேரமும் வேலை செய்யும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால் இந்த வேகத்தின் விலை அதிகம். நீண்ட வேலை நேரம், போதிய ஊதியம் இல்லை, பணி பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. குறிப்பாக 10 நிமிட டெலிவரி என்ற அழுத்தம் உயிருக்கு ஆபத்தாக இருப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். சுகாதார பாதுகாப்பு, விபத்துக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற அடிப்படை உரிமைகள் இல்லாததே அவர்களின் முக்கிய வேதனை.
இந்த நிலையில், தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி டிசம்பர் 31-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஸ்விக்கி, சோமடோ, செப்டோ, பிளிங்கிட், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு ஆர்டர்கள் குவிந்துள்ள நிலையில், இந்த போராட்டம் டெலிவரிகளை பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
