ஜனநாயக ஆதரவாளர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டு சிறை… ஹாங்காங்கில் சர்ச்சை!
தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கில் ஹாங்காங்கின் முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு உலகளவில் கவனம் பெற்றுள்ளது. ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனா கடுமையாக நடவடிக்கை எடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரிட்டன் ஆட்சியில் இருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ‘ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை’ கொள்கை அமல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்கள் பின்னர் கடுமையாக அடக்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர்.

ஜனநாயக ஆதரவு கருத்துகளை வெளியிட்ட ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழை நடத்தி வந்த ஜிம்மி லாய் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 2020 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு சக்திகளுடன் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
